

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் பூனம் ரவுட், மந்தனா தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய அணி 26.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது, மந்தனா 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பூனம்
அடுத்து கேப்டன் மிதலி ராஜ் களம் இற்ங்கினார்கள். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூனம் ரவுத் 134 பந்தில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிதலி ராஜ் 73 பந்தில் 71 ரன்கள் எடுத்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழக்க இந்தியா 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.
71 ரன்கள் எடுத்த கேப்டன் மிதலி ராஜ்