டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையாக வெளியிட்ட ஐ.சி.சி.

டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையான வெளியிட்ட ஐ.சி.சி., அந்நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.
டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையாக வெளியிட்ட ஐ.சி.சி.
Published on

இதனால் நாம் சொல்ல வந்த கருத்துக்களை சுருக்கமாகத்தான் கூற இயலும். இதனால் விரிவான கருத்துக்களை இரண்டு அல்லது மூன்று முறை டுவிட் செய்ய வேண்டும். இதனால் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை கவனத்தில் கொண்ட டுவிட்டர் நிறுவனம், 140 எழுத்துக்கள் என்பதை 280 ஆக நீடித்துள்ளது. இதன்மூலம் தற்போது டுவிட் செய்பவர்கள் விரிவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பொதுவாக மிகவும் நீளமாக இருக்கும். இதனால் ஐ.சி.சி. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் பெயர்களை சுருக்கிதான் எழுதும். தற்போது 280 எழுத்துக்கள் என்பதால் முழுப் பெயரையும் பதிவிட்டுள்ளது. இதற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com