உத்தரபிரதேசத்தில் ஐ.ஐ.டி மாணவி கற்பழிப்பு - விமானப்படை அதிகாரி மீது வழக்கு

உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கற்பழித்து விட்டதாக விமானப்படை அதிகாரி மீது ஐஐடி மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஐ.ஐ.டி மாணவி கற்பழிப்பு - விமானப்படை அதிகாரி மீது வழக்கு
Published on

கான்பூர்:

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் சிடான்ஷு. இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்து வரும் இளம் பெண் ஒருவருக்கும் ஓர் ஆண்டுக்கு முன்பு ‘முகநூல்’ மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சிடான்ஷு அடிக்கடி ஐ.ஐ.டி.யில் உள்ள பெண்கள் விடுதிக்கு சென்று அந்த இளம்பெண்ணை ரகசியமாக சந்தித்து வந்து உள்ளார்.

அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை கற்பழித்து விட்டதாக சிடான்ஷு மீது போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சிடான்ஷு மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com