விமானப்படை விமானம் மீது பறவை மோதியது- பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

ஹரியானாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானப்படை விமானம் மீது பறவை மோதியது- பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி
Published on

அம்பாலா: 

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். 

இதுதொடர்பாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: "பயிற்சி விமானத்தின் மீது பறவை மோதியதால் ஒரு எஞ்சின் செயலிழந்தது. மீதமுள்ள ஒரு எஞ்சினின் மூலம் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதில் விமானி எந்தவித காயமும் இன்றி தப்பினார்".

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com