திருமணம் முடிந்த மறுநாளே கலக்கிய தனஞ்ஜெயா

இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார்.
திருமணம் முடிந்த மறுநாளே கலக்கிய தனஞ்ஜெயா
Published on

பல்லகெலே :

இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். இந்த ஆட்டத்திற்கு முந்தைய நாள் தான் அவருக்கு திருமணம் நடந்தது. சிறுவயது தோழி நதாலி தேக்‌ஷினியை மணந்த 23 வயதான தனஞ்ஜெயா அன்று இரவு 11 மணிக்கு அணியினர் தங்கிருக்கும் ஓட்டலுக்கு வந்து விட்டார்.

தேனிலவுக்கு கூட செல்லாமல் திருமணம் முடிந்த மறுநாளே களம் புகுந்த தனஞ்ஜெயா, சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவருக்கு இதில் வெற்றி கிடைத்திருந்தால் அது திருமண பரிசாக அமைந்திருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com