

இந்த போட்டியில் 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது, களத்தில் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 59 பந்துகளில் 77 ரன்கள் வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஜடேஜாவும் டோனியும் ஆட்டத்தை இழக்காமல் கடைசி வரை கொண்டுவந்தனர். கடுமையாக போராடியும் இந்தியா தோற்றது. இருப்பினும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உங்களின் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து உத்வேகம் கொடுங்கள். என் கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தும், ஜடேஜாவிற்கு வாழ்த்துக் கூறியும் வருகின்றனர்.