ராகுல் காந்தி உத்தரவிட்டால் வாரணாசியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் - பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
ராகுல் காந்தி உத்தரவிட்டால் வாரணாசியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் - பிரியங்கா காந்தி
Published on

திருவனந்தபுரம்:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.

இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.  #Varanasi #PriyankaGandhi  #PriyankaGandhicontest #LSpolls2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com