கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் - விமர்சனங்களுக்கு கமல் பதிலடி

கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் - விமர்சனங்களுக்கு கமல் பதிலடி
Published on

அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சிலர் விமர்சனங்களுடன் ஆதரவு தெரிவித்தனர். கமலின் பேச்சுக்கு எழுந்த குறிப்பான விமர்சனமாக அதிமுகவுக்கு எதிராக தான் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சியில் ஏன் குறை கூறவில்லை என்பதாகும். திமுகவின் ஊதுகுழலாகவே கமல் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ”என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com