ஜாகீர்கானை போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்: கலீல் அகமது

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, ஜாகீர் கான் போன்று தலைசிறந்த பந்து வீச்சாளராக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கலீல் அகமது
கலீல் அகமது
Published on

இந்நிலையில் ஜாகீர் கான் போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘இந்தியாவுக்காக ஜாகீர் கான் விளையாடியதுபோல், நான் விளையாட விரும்புகிறேன். அவர் அணிக்கு என்ன செய்தாரோ அதை நானும் செய்ய விரும்புகிறேன். அவரைப் போல் இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்.

எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, அப்தெல்லாம் ஜாகீர்கானை தொடர்பு கொள்வேன். அவர் எப்போதும் எனக்கு ஆலோசனை வழங்குவார்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com