

ஐதராபாத்தில் உள்ள ஐஐடி கல்லூரியில் பயில்பவர் மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்(20). விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர், கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் பேசிவிட்டு அன்றிரவு 11 மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் பிற்பகல் வரை சார்லஸ் ரூமை விட்டு வெளியே வரவில்லை. எனவே, நண்பர்கள் அவரது ரூமிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சார்லஸ் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
சார்லஸ், உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. பின்னர் அவரது பெற்றோருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. சார்லஸ் தூக்கிட்டுக் கொண்ட ரூமை போலீசார் சோதனை செய்தனர்.
நான் எதற்கும் பயன்படாதவனாக உணர்கிறேன். நண்பர்கள் எனக்கு அதிக அன்பை வழங்கினர். அவர்களுக்கு திருப்பித்தர அன்பு ஒன்றுதான் உகந்தது. என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் எதற்கும் பயன்படாதவனாகிவிட்டேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார்.