2019 வரை விளையாடுவேன்: நம்பிக்கை தெரிவிக்கிறார் யுவராஜ் சிங்

உடற்தகுதி டெஸ்டில் தொர்ந்து தோல்வியை சந்தித்து வரும் யுவராஜ் சிங், 2019-ம் ஆண்டு வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published on

இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது ‘யோ-யோ’ என்ற உடற்பயிற்சி டெஸ்ட் என்பதை இந்திய அணி அறிமுகப்படுத்தியுள்ளதால், அதில் தேர்ச்சி ஆக முடியாமல் தவித்து வருகிறார். இதனால் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்ற பேச்சு உலா வருகிறது.

இந்நிலையில் நான் 2019 வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் தோல்வியடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை கட்டாயம் சொல்வ வேண்டும். தற்போதும் பெயில்தான். நான் கடந்த மூன்று முறை பிட்னெஸ் டெஸ்டில் பெயில் ஆனேன். ஆனால், நேற்று நான் பிட்னெஸ் டெஸ்டில் பாஸ் ஆகியுள்ளேன்.

17 வருடத்திற்குப் பிறகு பெயில் ஆகி கொண்டிருக்கிறேன். இதனால் நான் கவலைப்படவில்லை. நான் ஏற்றம் இறக்கத்தை கண்டுள்ளேன். ஒருவர் வெற்றி நாயகனாக வரவேண்டும் என்றால், தோல்வி தேவை, தோற்கடிக்கப்பட வேண்டும். அந்த தோல்வி அவரை வலுவான நபராக மாற்றும். அது அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com