ஐதராபாத் பெண் டாக்டர் கொலை- லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

ஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு தொடர்பாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பிரியங்கா
கொலை செய்யப்பட்ட பிரியங்கா
Published on

ஐதராபாத்:

ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரியங்கா தனது பைக் பஞ்சர் ஆனதால், டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு பைக்கை நிறுத்தி உள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வதாக ஒரு லாரி டிரைவர் கூறியுள்ளார். இந்த தகவலை தனது குடும்பத்தினரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியதுடன், தனக்கு பயமாக இருப்பதாக கூறியுள்ளார் பிரியங்கா. 

சிறிது நேரத்தில் அவரது செல்போன சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அதன்பின்னர் குடும்பத்தினர் டோல்கேட்டுக்கு வந்து பார்த்தபோது பைக் மட்டும் இருந்தது, பிரியங்காவை காணவில்லை. 

பின்னர் அவரது உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு பாலத்தில் கண்டெக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 

முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் லாரி டிரைவர் முகமது பாஷா நாராயணன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆவார். கிளீனர் மற்றும் 2 நபர்கள் ரங்காரெட்டி மற்றும் மகபூப்நகரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com