ஐதராபாத்: எல்.கே.ஜி. மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியை கைது

தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் எல்.கே.ஜி. படிக்கும் சிறுவனை கொடூரமாக தாக்கிய பள்ளி ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்: எல்.கே.ஜி. மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியை கைது
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டார்னகா பகுதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுவன் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். மாலை வீட்டிற்கு வந்த போது அவன் முதுகில் காயம் இருந்துள்ளது. அதனை பார்த்த சிறுவனின் தாத்தா அதிர்ச்சியடைந்துள்ளார்.


இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று கேட்ட போது அவர்கள் சரியாத பதில் கூறவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றொர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தையை துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் வகுப்பில் உள்ள மாணவனுடன் சண்டையில் ஈடுபட்டு அவனை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியை சிறுவனை தாக்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com