திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
Published on

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகுபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 23). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது பழனியம்மாள் எழுதிய டைரி சிக்கியது. அதில் பழனியம்மாள் அழகாக இல்லை அவரது தங்கைதான் அழகாக இருப்பதாக கூறி தினந்தோறும் சரவணன் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனை உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.

மேலும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com