பாபநாசம் அருகே கணவர் கண்டித்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

பாபநாசம் அருகே இரவில் வாலிபருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம் அருகே கணவர் கண்டித்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பொன்மான் மேய்ந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி ராஜஸ்ரீ(32), இவர்களுக்கு அஜிலேஸ் (10) என்ற மகனும், அனுஜ்ஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனர்.

ராஜஸ்ரீக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே நீண்டநாளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்ரீ, கடந்த ஜனவரி மாதம், அந்த வாலிபருடன் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சார்லஸ் மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இதுபற்றி அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்ரீயை மீட்டு, சார்லசிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு ராஜஸ்ரீ,  தனது செல்போனில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதை சார்லஸ் கவனித்து விட்டார். இதனால் அவர் யாரிடம் இந்த இரவு நேரத்தில் பேசுகிறாய்? என்று கேட்டார். இதில் பயந்து போன, ராஜஸ்ரீ பீதியில் செல்போனை தூக்கி போட்டு விட்டு, கொல்லைப்புறமாக தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து சார்லஸ், செல்போனை எடுத்து பார்த்தபோது மனைவி, கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது. இதற்கிடையே ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய ராஜஸ்ரீ அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் பலன் இல்லாமல் போனது. இந்த நிலையில் அதே கிராமரத்தில் அழகர் என்பவரது திடலில் உள்ள மா மரத்தில் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சார்லஸ் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செல்போனில் கள்ளக்காதலனுடன் பேசியதால் ராஜஸ்ரீ உயிரை மாய்த்து கொண்டார். இதனால் இன்று அவரது 2 குழந்தைகளும் தாயை இழந்து விட்டதே என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com