ஆண்டிப்பட்டி அருகே கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே பாலூத்து பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி தமிழ்செல்வி. (வயது 30). சம்பவத்தன்று குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மலைச்சாமி தமிழ்செல்வியை திட்டியுள்ளார்.

எப்போதும் தன்னை திட்டாத கணவர் திட்டி விட்டாரே என மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வி வி‌ஷம் குடித்து மயங்கினார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). இவர் ராசிங்காபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று போடி - தேவாரம் சாலையில் பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

போடி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com