தொட்டியம் அருகே கணவர் திட்டியதால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை

தொட்டியம் அருகே கணவர் திட்டியதால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தொட்டியம் அருகே கணவர் திட்டியதால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். டிரைவர். இவரது மனைவி லதா (42). இவர்களுக்கு சூர்யா (12), பிருந்தா (10), சரண்யா (6) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வம் லதா இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம் லதாவை திட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். 

இதில் மனமுடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பக்கத்தில் உள்ள வயலுக்கு சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த  அக்கம் பக்கம் உள்ளவர்கள் லதாவை தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com