நகைக்காக என் மனைவியை போலி சாமியார் கொன்று விட்டார்- கணவர் கண்ணீர் பேட்டி

என் மனைவியை போலி சாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
நகைக்காக என் மனைவியை போலி சாமியார் கொன்று விட்டார்- கணவர் கண்ணீர் பேட்டி
Published on

புதுவை:

கிருஷ்ணவேணியை போலி சாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவர் அசோக் கண்ணீர் மல்க கூறியதாவது:-

என் வீட்டின் எதிரே போலி சாமியார் கோவிந்தராசு தனது மகளுடன் குடிவந்த போது ஆதரவற்றவராக இருந்ததால் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பழகினோம்.

என் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் அதிக தெய்வ பக்தி கொண்டவர்கள். இதனை பயன்படுத்தி போலி சாமியார் எங்களிடம் பணம் பறிக்க தொடங்கினார்.

திருமணம் நடைபெறாமல் இருந்த எனது தங்கைக்கு கோவிந்தராசு பரிகார பூஜை செய்தால் உடனே திருமணம் நடைபெறும் என கூறியதால் கோவிந்தராசு மீது அதிக நம்பிக்கை வைத்தோம்.

ஒரு கட்டத்தில் எனக்கு தெரியாமல் என் மனைவியிடம் எனக்கு 2-வது திருமணம் நடைபெறும் என்றும் எனது மனைவிக்கு தெரியாமல் என்னிடம் கிருஷ்ணவேணி உன்னை விட்டு பிரிந்து போய் 2-வது திருமணம் செய்து கொள்வார்.

அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி எங்களிடம் தனித்தனியாக பணம் பறித்து கொண்டார். அதோடு புதிதாக திருமணம் முடிந்த எனது தங்கை கணவரை சந்தித்தும் இதேபோல் கூறி பணம் பறித்துள்ளார்.

பணம்- நகை வேண்டும் என்று கேட்டால் கூட கொடுத்து இருப்போம். அநியாயமாக என் மனைவியை கொன்று விட்டு என்னையும், என் குழந்தைகளையும் மோசடி பேர்வழி கோவிந்தராசு தவிக்க விட்டதுடன் அப்பாவி போல் என்னுடன் சேர்ந்து எனது மனைவியை தேடிய போது போலி சாமியார் கோவிந்தராசுவுக்கு கண்டிப்பாக ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அசோக் கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com