ஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது

ஒடிசா மாநிலத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் தங்கி படிக்கும் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய தலைமையாசிரியையின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

  புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், கோராப்புட் மாவட்டத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவியிர் தங்கி படிக்கும்

அரசு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு அம்மாவட்ட கல்வித்துறை சார்பில் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அப்போது, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த டாக்டர்கள் திடுக்கிட்டனர். இதுதொடர்பாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர் குடியிருப்பில் தங்கி இருக்கும் தலைமையாசிரியையின் கணவரான ராஜேந்திரநாத்(60) என்பவர், வீட்டில் யாருமில்லாத வேளையில் அந்த மாணவியை வரவழைத்து பலமுறை மிரட்டியும் பலவந்தப்படுத்தியும் கற்பழித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜேந்திரநாத்-ஐ போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com