மனைவியை கொன்று கணவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

கும்பகோணம் அருகே மனைவியை கொன்று விட்டு ரெயில்முன் பாய்ந்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சாங்கா பாளையம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75) கார் டிங்கரிங் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (65).

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இன்றும் வழக்கம்போல் காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி அருகே கிடந்த கடப்பாரையால் மனைவி கருப்பாயியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மனைவியை கொலை செய்ததால் முனியாண்டி அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரத்தில் அடித்ததால் மனைவி இறந்து விட்டாரே என்று வேதனைப்பட்டார். இதனால் தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு எடுத்தார்.

இதையடுத்து இன்று காலை தாராசுரம் ரெயில்வே கேட் அருகில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் முனியாண்டி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கும்பகோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து சென்று கருப்பாயி மற்றும் முனியாண்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முனியாண்டிக்கு அமுதா (35) என்ற மகளும், கார்த்தி என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். இருவரும் மதுரையில் வசித்து வருகிறார்கள். குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்ப கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com