தற்கொலை
தற்கொலை

மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே கணவர் இறந்த வருத்தத்தில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ். இவரது மனைவி ஸ்டெல்லாபாய், (வயது 55).

ஸ்டெல்லாபாயின் கணவர் கடந்த மாதம் இறந்து விட்டார். இதில் ஸ்டெல்லா பாய் மன வருத்தத்துடன் காணப்பட்டார். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்டெல்லாபாய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் நித்திரவிளை சூரியக் கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன், (வயது 37), கட்டிடத் தொழிலாளி. இவர் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரது அண்ணன் வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் ஸ்ரீகண்டன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது அண்ணன் வீடு திரும்பினார். அப்போது ஸ்ரீகண்டன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் விஜயதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com