கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் மெயின் ரோடு ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி அனிச்சமலர் (வயது52). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் பாண்டுரங்கன் இறந்து போனார். கணவர் இறந்ததால் அனிச்சமலர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரின் மறைவால் சோகத்துடன் இருந்து வந்தார்.

இதையடுத்து அனிச்ச மலரை அதே பகுதியில் வசிக்கும் அவரது அக்காள் தனது வீட்டுக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறி நேற்று அனிச்சமலரை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த அனிச்சமலர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பாரம் தாங்காமல் துப்பாட்டா அறுந்து விழுந்தது. இதனால் சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் அனிச்சமலரை வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு உயிருக்கு போராடிய அனிச்சமலரை கரிக்கலாம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனிச்சமலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அனிச்சமலர் அக்காள் மகன் சுமன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குபதிவு செய்து விசரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com