மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

தா.பேட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த வாளசி ராமணி ரெட்டியார் தெருவில் வசித்து வந்தவர் பெரியசாமி (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரியசாமியின் மனைவி மாரியம்மாள் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில் நேற்று முன்தினம்  பெரியசாமி வீட்டில் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் குருணை மருந்தை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த பெரியசாமியை நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இறந்து போன பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com