மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் தற்கொலை

கல்லலில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் தற்கொலை இறந்து விட்டதாக நினைத்து விபரீத முடிவு
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் தற்கொலை
Published on

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் கல்லல் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மனைவி பிச்சை பாண்டி (45). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயன் அரிவாளால் மனைவியை வெட்டினார். படுகாயம் அடைந்த பிச்சைபாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து விஜயன் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில்உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிச்சைபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஜயன், தனது மனைவியை கொலை செய்து விட்டோமே என வருந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்போது பிச்சைபாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com