தேவதானப்பட்டியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

தேவதானப்பட்டியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ராம் பிரசாத் (34). இவர் தனியார் பால் பண்ணையில் பால் சப்ளை செய்யும் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும் திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த வசந்தி (25) என்பவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வசந்தி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

ராம் பிரசாத் தனது மனைவியை அழைத்தும் வரவில்லை. இன்று காலை பால்பண்ணைக்கு அவர் வராததால் ஊழியர்கள் ராம்பிரசாத் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com