முக்கூடல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

முக்கூடல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி முத்து. இவரது மகன் சிலம்பரசன் (வயது21). கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் விவாகாரத்தான முத்து லெட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்து லெட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது.

இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துலெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதில் மனமுடைந்த சிலம்பரசன் நேற்று தனது வீட்டருகே உள்ள புளிய மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com