உல்லாசத்துக்கு மறுத்ததால் கணவன் தாக்குதல்: ஒரு வயது குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி

சேலம் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கணவர் தாக்கியதில் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உல்லாசத்துக்கு மறுத்ததால் கணவன் தாக்குதல்: ஒரு வயது குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் சேலத்தான்பட்டி அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா (வயது25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் பவுசிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் 2 குழந்தைகளையும் அம்மை நோய் தாக்கியது. இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று அதிகாலை மணிகண்டன் தனது மனைவியை உல்லாசமாக இருக்கலாம் வா என்று கூறி அழைத்தார். இதற்கு 2 குழந்தைகளையும் அம்மை நோய் தாக்கி இருப்பதால் உல்லாசமாக இருக்க முடியாது என்று கூறி மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் புனிதாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் வெளியில் சென்று விட்டார்.

கணவன் அடித்து உதைத்ததால் மனம் உடைந்த புனிதா தனது ஒரு வயது மகள் புனிதாவுக்கு வி‌ஷத்தை கொடுத்துவிட்டு தானும் வி‌ஷத்தை குடித்தார். இதனால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். வெளியில் சென்ற மணிகண்டன் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது மனைவியும் மகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கவுசிகா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உளளது.

இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com