நிலக்கோட்டை அருகே கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை

நிலக்கோட்டை அருகே கணவன்-மனைவி அடுத்தடுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை
தற்கொலை
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள விளாம்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட நாட்டார்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (வயது28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சன்னாசி மகள் பவித்ரா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகள் உள்ளார்.

பவித்ராவுக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். இதனால் சம்பவத்தன்று காலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். திருணமாகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ உஷா மேல் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் இருந்த வீரணன் அவரது உடலை அடக்கம் செய்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கணவன், மனைவி ஆகிய 2 பேரும் அடுத்டுத்து தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது கைக்குழந்தை அனாதையாக உள்ளது. குழந்தை ஆதரவின்றி அழுததை பார்த்த அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com