மோட்டார் சைக்கிளில் மீது டிராக்டர் மோதி கணவன்-மனைவி காயம்

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிளில் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலத்த காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் மீது டிராக்டர் மோதி கணவன்-மனைவி காயம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டியை அடுத்த சென்னான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது67). விவசாயியான இவருக்கு சின்னபாப்பா (55) என்ற மனைவி உள்ளார். முத்துவும், அவரது மனைவியும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னான் கொட்டாய் பகுதிக்கு வந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முத்துவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com