துடியலூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவி கைது

துடியலூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவி கைது

துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.
Published on

கவுண்டம்பாளையம்:

துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com