கிருஷ்ணகிரி அருகே 2 கோவிலில் மூன்று உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே 2 கோவிலில் மூன்று உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கம்மம்பள்ளி கொட்டாவூர் தோப்பு பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் மற்றும் அதேபகுதியில் விநாயகர் கோவிலிலும் உள்ளது.

இந்த கோவில்களில் வழக்கம் போல் நேற்று பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை வந்து பார்த்தபோது 2 கோவில் களிலும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போனது தெரியவந்தது. சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள 2 உண்டியல்கள், விநாயகர் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரிகள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் முழுவதும் திருடு போயிருந்ததை அடுத்து இதுகுறித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com