

ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை அப்புறப்படுத்த போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜேம்ஷெட்பூரில் சாலையில் ஒரு மாற்றுத்திறனாளி விடிந்தது தெரியாமல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற போலீசார் மாற்றுத்திறனாளியை உடனடியாக எழுந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு ஒருகாலில் முழங்கால் பகுதி வரை இல்லாததால் அவரால் உடனடியாக எழுந்து செல்ல முடியவில்லை. இதனால் போலீசார் அவரை அடித்து இழுத்துச்சென்று சாலையோரம் தள்ளியுள்ளனர்.
இந்நிலையில், போலீசார் தாக்குதலால் மாற்றுத்திறனாளிக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தி பரவியதையடுத்து பலதரப்பினரும் மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீசார் மீது கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Jharkhandpolice #handicappedpersonattack #HRCcondemns #tamilnews