நெல்லிக்குப்பத்தில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு

பெரியார் சிலை இடிக்கப்படும் என கருத்து தெரிவித்த எச். ராஜாவை கண்டித்து அரசியல் கட்சியினர் அவரது உருவபொம்மையை எரித்தனர்.
நெல்லிக்குப்பத்தில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு
Published on

கடலூர், மார்ச்.7-

பெரியார் சிலை இடிக்கப் படும் என கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ கம் முழுவதும் பல்வேறு கட்சி சார்பில் போராட் டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர். எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட் டம் செய்தனர். இதில் தி.மு.க.வினர் ஏராள மானோர் கலந்து கொண் டனர்.

கடலூர் மாவட்டம் நெல் லிக்குப்பத்தில் விடு தலை சிறுத்தை கட்சி யினர் அங்குள்ள அண்ணா சிலை அருகே இன்று காலை திரண் டனர். பின்னர் அவர் கள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலை மையில் எச்.ராஜாவை கண் டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப் பினர்.

பின்னர் அவர்கள் எச்.ராஜாவின் உருவபொம் மையை தீவைத்து எரித்த னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உருவபொம்மை யை கைப்பற்றி தீயை அணைத்தனர். அதன் பின்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com