வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு: தாயின் பிணத்துடன் சுடுகாட்டில் 5 மணி நேரம் தவித்த பிளஸ்-2 மாணவி

வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் இறந்த தாயின் உடலுடன் சுடுகாட்டில் 5 மணி நேரமாக பிளஸ்-2 மாணவி தவித்த தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் விரைந்து சென்று வீட்டின் உரிமையாளரை எச்சரித்தனர்.
வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு: தாயின் பிணத்துடன் சுடுகாட்டில் 5 மணி நேரம் தவித்த பிளஸ்-2 மாணவி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நல்லியாம்பாளையம் சண்முகநகரை சேர்ந்தவர் லலிதா (வயது 47). வெங்கரையில் தபால் ஊழியராக வேலை செய்து வந்தார். கணவரை இழந்த இவர் பிளஸ்-2 படிக்கும் மகள் பூவிழியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட லலிதா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அவர்கள் வசித்த வீட்டின் உரிமையாளர், லலிதாவின் பிணத்தை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூவிழியிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பரமத்திவேலூர் நல்லியாம்பாளையம் சுடுகாடு அருகே ஆம்புலன்சில் தாயின் பிணத்துடன் 5 மணி நேரம் பரிதவித்து கொண்டு நின்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் விரைந்து சென்று வீட்டின் உரிமையாளரை எச்சரித்தனர். மேலும் லலிதாவின் உறவினர்கள் வந்து இறுதிச்சடங்குகள் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து லலிதாவின் உடல் வாடகை வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com