மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அணியாப்பூர் அருகே உள்ள காய்சகாரன்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தம்பதி இருவரும் கரூரில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று தனது மகனை விராலிமலையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக புறப்பட்டனர். பின்னர் இலுப்பூரில் உள்ள அமுதாவின் தாய் வீட்டிற்கு சென்று இரவில் அங்கு தங்கினர்.

இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் காய்சகாரன்பட்டியில் உள்ள சங்கர் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் மகனின் கல்லூரி படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து வையம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com