

தேனி:
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே வசிப்பவர் ஈஸ்வரன்(வயது40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீடு ஓட்டலுக்கு பின்புறம் உள்ளது. நேற்று இரவு தனது குடும்பத்துடன் பொருட்கள் வாங்குவதற்கு தேனிக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்த போது நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு பதறினார்.
இது குறித்து தேனி போலீசில் ஈஸ்வரன் புகார் செய்தார். புகாரில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்வதற்காக 50 பவுன் நகையை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து பீரோவில் வைத்திருந்தேன். எனவே இதனை தெரிந்த நபர்கள் எடுத்திருக்க கூடும் என தெரிவித்து உள்ளார்.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். ஈஸ்வரன் கொடுத்த தகவலின் பேரில் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் யார்?யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். #Tamilnews