முள்ளுவாடி கேட் அருகே ஓட்டலில் தீ விபத்து- சிலிண்டர் வெடித்து ஊழியர் காயம்

சேலம் முள்ளுவாடி கேட் அருகே ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஊழியர் பலத்த காயம் அடைந்தார்.
சிலிண்டர் வெடித்ததில் சமையல் அறை எரிந்து சேதம் அடைந்தது
சிலிண்டர் வெடித்ததில் சமையல் அறை எரிந்து சேதம் அடைந்தது
Published on

சேலம்:

சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் முள்ளுவாடி கேட் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 6 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலையை முடித்து விட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டல் சமையல் அறையிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஊழியர் ராஜேந்திரன் என்பவர் இறங்கி வந்தார். சமையல் அறைக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீ பிடித்தது. சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் வந்து பார்த்து போது தீ எரிந்து கொண்டிருந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் வலியால் அலறினார்.

இது குறித்து டவுண் போலீசாருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து காயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக சமையல் அறையில் உள்ள எண்ணெய் பசையில் தீ பிடித்ததில் சிலிண்டர் சூடாகி வெடித்தது தெரியவந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com