கள்ளச் சாராயத்திற்கு 5 பேர் பலி: உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 12 போலீசார் சஸ்பெண்ட்

பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து ஐந்து பேர் பலியான சம்பவத்தில், உயர் போலீஸ் அதிகாரி உள்பட 12 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச் சாராயத்திற்கு 5 பேர் பலி: உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 12 போலீசார் சஸ்பெண்ட்
Published on

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பீகார் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் ரோடாஸ் மாவட்டம் தன்வார் கிராமத்தை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com