முத்தூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை- பொருட்கள் கொள்ளை

முத்தூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து டி.வி., லேப்-டாப், ஏர்கூலர் மற்றும் 1½ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
முத்தூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை- பொருட்கள் கொள்ளை
Published on

முத்தூர் அருகே உள்ள சாந்தலிங்க புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். மதியம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர் ராஜேந்திரன் வீட்டுக்கு சிலிண்டர் கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது.

இதையடுத்து சிலிண்டர்கொண்டு வந்த நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து வீடு திறந்து கிடக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. எப்போது வருவீர்கள் என கேட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி., லேப்-டாப், ஏர்கூலர் மற்றும் 1½ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ராஜேந்திரன் வெள்ள கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com