நாகையாபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

நாகையாபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகையாபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாழவந்தான்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 34).

இவர் வீட்டில் தந்தை, தங்கை, அவரது கணவர் பெரியசாமி ஆகியோருடன் இரவில் படுத்து உறங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர்.

இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் புகுந்து மலைச்சாமியின் தங்கை கழுத்தில் கிடந்த  தங்கச்சங்கிலியை பறித்தான்.

இதனால் திடுக்கிட்டு கண் விழித்த அவர் திருடன்... திருடன்.... என கூச்சலிட்டார். இதனை கேட்டு எழுந்த மலைச்சாமி மற்றும் குடும்பத்தினர், நகை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இது குறித்து நாகையாபுரம் போலீசில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com