‘எல்லா தேர்தல்களையும் ஜனவரி 21-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ - நேபாள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

நேபாள அரசு அந்த நாட்டின் அதிபர், துணை அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் வரும் ஜனவரி மாதம் 21-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘எல்லா தேர்தல்களையும் ஜனவரி 21-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ - நேபாள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

காட்மாண்டு:

நேபாளத்தில் எல்லா தேர்தல்களையும் நடத்தி முடிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் சந்திரகாந்த் கியாவாலி மற்றும் சிலர் வழக்குகள் தொடுத்தனர்.

இந்த வழக்குகளில் எதிர்வழக்குதாரர்களாக பிரதமர், மந்திரிகள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் தீபக் ராஜ் ஜோஷி, ஹரி கிருஷ்ண கார்கி ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

விசாரணை முடிவில் நேபாள அரசு அந்த நாட்டின் அதிபர், துணை அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் வரும் ஜனவரி மாதம் 21-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை நேபாள அரசு இயற்றவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

நேபாள பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தேர்தல் தொடர்பான 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com