ஒகேனக்கல் அருகே விவசாயி வீட்டில் பணம் திருட்டு

ஒகேனக்கல் அருகே விவசாயி வீட்டில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே உள்ள மடம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ் (வயது 30). இதேபகுதியை சேர்ந்தவர் லட்சுமி (37). இவர்களுக்கு அருகருகே வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு லட்சுமி வீட்டின் குளியல் அறை வழியாக மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு லட்சுமி வெளியே வந்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக அவர்கள் ஒகேனக்கல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com