ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்
ஒகேனக்கல்
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் அவர்கள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றின் கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். மேலும் ஒகேனக்கல்லில் மீன்வருவல், மீன் சாப்பாடு போன்றவை விற்பனை வியாபாரம் சூடுபிடித்தது. மேலும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com