எச்.ஐ.வி. பாதித்த தண்டனை கைதி மரணம்

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்.ஐ.வி. பாதித்த தண்டனை கைதி மரணம்
Published on

மதுரை:

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 59). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு எச்.ஐ.வி., புற்று நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக துரைச்சாமி தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை போலீசார் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த துரைச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com