

பழனி:
இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு தெரிவித்துள்ளனர்.