இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

இமாச்சலபிரதேசத்தில் இன்று மாலை அங்கு தேர்தல் பிரசாரம் ஒய்கிறது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
Published on

சிம்லா:

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. முதல்-மந்திரியாக உள்ள வீரபத்ரசிங் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. பிரேம்குமார் துமல் பா.ஜனதாவின் முதல்- மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலபிரதேசத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தனர். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

இன்று மாலை அங்கு தேர்தல் பிரசாரம் ஒய்கிறது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமி‌ஷன் செய்கிறது.

தேர்தலையொட்டி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் ரூ.5 கோடி மதிப்புள்ள மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com