

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கூர்காலாந்து போராட்டம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக டார்ஜிலிங் மலைப்பகுதியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கூர்காலாந்து இயக்க ஒத்துழைப்பு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. 30 உறுப்பினர்கள் கொண்ட இந்த கமிட்டியின் தலைவராக ஜிஜேஎம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கமிட்டி சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்றும், ஜூலை 15-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி ஜி.ஜே.எம். செயலாளர் பினய் தமங் கூறும்போது, ‘காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்துடன், ஜூலை 15-ம்தேதி முதல் டார்ஜிலிங் மலைப்பகுதியின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் சவுராஸ்டிராவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளனர்.