ஒரே நாளில் 50 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் - உலக அளவில் இந்தியா சாதனை

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 50 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த வகையில் இந்தியர்கள் புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
இணையதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல்
இணையதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல்
Published on

வருமான வரி செலுத்துபவர்கள் தங்களது அரையாண்டு கணக்கு விபரங்களை செலுத்த ஆகஸ்ட் 31 (நேற்று) கடைசி நாளாகும்.

இந்நிலையில்,  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 50 லட்சம் பேர் வருமான ஆன்லைன் மூலம் வரி கணக்கு தாக்கல் செய்த வகையில் இந்தியர்கள் புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

கடைசி தினமான நேற்று மட்டும் 49 லட்சத்து 29  ஆயிரத்து 121 பேர் இணையத்தின் (ஆன்லைன்) மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் இன்று தெரிவித்துள்ளது.

நேற்று பரபரப்பான உச்சக்கட்ட நேரத்தில் சராசரியாக ஒரு நொடிக்கு 196 பேரும் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 7,447 பேரும் ஒரு மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 3 லட்சத்து 87 ஆயிரத்தி 571 பேரும் பேரும் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com