சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றலாம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிக்கொள்ளாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.
உயிரிழந்த தந்தை, மகன்
உயிரிழந்த தந்தை, மகன்
Published on

மதுரை:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்தாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ம் தேதி காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

ஆனால், 22ம் தேதி இரவு பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உடல்களிலும் ரத்தக்காயங்கள் இருந்தன. போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். 

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிலையில், தந்தை மகன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘சிபிஐ விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் மாற்றுங்கள். இதற்கு நீதிமன்ற அனுமதி தேவை இல்லை’ என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com