

சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், செந்தில்முருகன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
‘தமிழக காவல் துறைக்கு ‘வாக்கி டாக்கி’ வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்கான ‘டெண்டரில்’ ‘மோட்டோரோலா சொல்யூசன்ஸ்’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதன்படி ரூ.83.45 கோடிக்கான இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்த்து.
அப்போது வரலாறு படித்துள்ள தங்களுக்கு வாக்கி டாக்கி தரம் பற்றிய தொழில் நுட்ப விபரங்கள் எப்படி தெரியும்? ஊழல் நடந்துள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக கேட்டனர்.
அதற்கு மனுதாரர் வாக்கி டாக்கி கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்றார். இதை ஏற்காத நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில் மனுதாரர் தான் கூறும் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை தரவில்லை. வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர். #tamilnews